பிஎம் ஶ்ரீ திட்டத்தை அனுமதிக்க கூடாது – முதலமைச்சருக்கு விஜய்க்கு, வைகோ வேண்டுகோள்…!

பிஎம் ஶ்ரீ திட்டத்தை தமிழ் நாட்டில் அனுமதிக்க கூடாது என முதலமைச்சர் விஜய்க்கு மதிமுக பொதுச்செயளாலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னையில் ஜூன் 27 தேதி மதிமுக பொதுக்குழு கூடுகிறது. இக்கூட்டத்தில் 3 துணை பொதுச் செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. மே 25 முதல் விண்ணப்பம் பெறலாம். ஒவ்வொரு வேட்பாளரையும் 25 பொதுக்குழு உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும்.

PM ஶ்ரீ திட்டத்தை எப்படியும் திணித்து விட மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த திட்டத்தை எதிர்த்தே ஆக வேண்டும். மத்திய அரசின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்தால் மீண்டும் ஒரு மொழிப்போர் நிகழும். எக்காரணம் கொண்டும் PM ஶ்ரீ திட்டத்தை அனுமதிக்க கூடாது என முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஆளுநர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் வந்தே மாதரத்தை திணிக்கிறார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் பாடப்பட வேண்டும். தமிழக அரசின் விழாக்களில் இது நடக்கக்கூடாது. அதிகாரத்தில் பங்கு அளித்த விவகாரத்தில் எந்த நோக்கத்தையும் நான் கற்பிக்க விரும்பவில்லை.

காங்கிரஸ் ஆதரவு அளித்து அமைச்சரவையில் பங்கேற்றுள்ளது. இது கூட்டணி அரசாக மாறியுள்ளது பாஜகவின் அஜண்டாவை நிறைவேற்றுவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்போம். திருமாவளவனை அதிகாரத்தில் பங்கேற்க அழைப்பதற்கு பின்னால் யூகங்கள் கற்பிக்க முடியாது” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.