ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அண்மைச் செய்தி : “தமிழ்நாடு முழுவதும் திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்” – பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு
இந்த வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வெள்ளையப்பன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 5 ஆண்டுகள் கடந்த காவல் தண்டனை மற்றும் ரூபாய் 5000 அபராதம் விதித்து நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் இன்று தீர்ப்பளித்தார்.







