திருவண்ணாமலை ஏடிஎம் பணம் கொள்ளை விவகாரத்தில் கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை நகர பகுதியில் உள்ள இரண்டு ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையம் மற்றும் போளூர் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையம் ஆகிய பகுதிகளில் 82 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் வடமாநில “மேவாட்” கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் அதிலிருந்து ஒரு நபர் இறங்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. இதையடுத்து கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிட்டதாகவும், அவர்களை தனிப்படை போலீசார் விரைந்து பிடித்து விடுவதாகவும் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
இதனை தொடர்ந்து நேற்று ஹரியானா மாநிலம் நூக் மாவட்டம் மேவாட் என்ற பகுதியை சார்ந்த கொள்ளை கும்பல்தான் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இந்த கொள்ளை விவகாரத்தில் கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளது. பெங்களூரில் கைது செய்யப்பட்ட அவரை திருவண்ணாமலை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.