உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை…

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

கடந்த மாதம் 17ம் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது.  வழக்கறிஞர்கள் விக்டோரியா கெளரி, பாலாஜி, ராமகிருஷணன், மாவட்ட நீதிபதி கலைமதி, திலகவதி ஆகியோரை சென்ன உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி இவர்கள் 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட ஸ்ரீமதி, பரத சக்கரவரித்தி, விஜயகுமார், முகமது ஷபிக் மற்றும் சத்திய நாராயண பிரசாத் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

அண்மைச் செய்தி : நீருக்கடியில் நீண்ட முத்தம் – காதலர் தினத்தன்று கின்னஸ் சாதனை படைத்த காதல் ஜோடி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.