ரீல்ஸ் மோகத்தால் எல்லை மீறிய செயலில் ஈடுபட்ட இருவர் பீகாரில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். நாக்ரி ஹால்ட் ரயில் நிலையம் அருகே, ஓடும் ரயிலின் படியில் அமர்ந்திருந்த பயணிகளை குச்சியால் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து ரயில்வே போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகள் மற்றும் பார்வைகளைப் பெறுவதற்காக இளைஞர்கள் எந்த அளவுக்கும் செல்ல துணிகிறார்கள் என்பதைக் காட்டியுள்ளது.
தங்கள் சுயநலமான நோக்கங்களுக்காக அப்பாவிப் பயணிகளைத் தாக்கிய இந்தச் செயல் பரவலாக கண்டிக்கப்பட்டுள்ளது. வைரலான வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், ரயில்வே போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களைத் தடுப்பதிலும் ரயில்வே காவல்துறையின் விரைவான நடவடிக்கை பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளப் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசையில், சட்ட விரோதமான மற்றும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.








