இயக்குனர் பாரதிராஜா கடந்த 10-ஆம் தேதி வயோதிகம் மற்றும உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். பாரதிராஜா மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடலுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளையராஜா, கமல், ரஜினி உட்பட ஏராளாமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, இறுதிச்சடங்குக்காக பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கொடைக்கானல் பிரிவுக்கு பக்கத்தில் உள்ள காட்ரோட்டில் உள்ள பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த 11ம் தேதி மாலை அரசு மரியாதையுடன் பாரதிராஜா இறுதிச் சடங்கு நடை பெற்றது
இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா மனைவி சந்திரலீலாவுக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “இந்த இழப்பை தாங்கிக்கொள்ளவும் குடும்பத்தினர் மன வலிமை பெறவும் வேண்டுகிறேன். கிராம வாழ்க்கையை தத்ரூபமாக சித்தரித்த பாரதிராஜாவின் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். இயக்குநர் பாரதிராஜா மறைவு வார்த்தைகளால் விவரிக்க முடியாத, ஈடு செய்ய முடியாத இழப்பு” என கூறியுள்ளார்.




