அதிக நன்கொடை திரட்டிய கட்சிகள்- முதலிடத்தில் பாஜக!

கடந்த நிதியாண்டில் அதிக நன்கொடை திரட்டிய கட்சிகள் பட்டியலில் முதலிடத்தில் பாஜக உள்ளது.  கடந்த 2021-22 நிதியாண்டில் அனைத்து 8 தேசிய கட்சிகள் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த அளவில் ரூ.3,289 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளன.…

கடந்த நிதியாண்டில் அதிக நன்கொடை திரட்டிய கட்சிகள் பட்டியலில் முதலிடத்தில் பாஜக உள்ளது. 

கடந்த 2021-22 நிதியாண்டில் அனைத்து 8 தேசிய கட்சிகள் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த அளவில் ரூ.3,289 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் முழுவிவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மார்ச் 31, 2022 நிலவரப்படி, பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,033 கோடியைப் நன்கொடையாக பெற்றுள்ளது என்று அக்கட்சி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த வருடாந்திர தணிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், 2018 நிதியாண்டில் ரூ.210 கோடியும், 2019ம் ஆண்டு ரூ.1,450 கோடியும் 2020ம் ஆண்டில் ரூ.2,555 கோடியும், 2021ம் ஆண்டில் ரூ.22.38 கோடியும் பெற்றுள்ளது. இதன் மூலம் பாஜகவின் மொத்த மதிப்பு ரூ.5,270 கோடியாக இருந்தது.2018-2022ம் ஆண்டு வரை உள்ள தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ததன் மூலம் ரூ.9,208 கோடி ரூபாய் பாஜகவிற்கு கிடைத்துள்ளது. இதனால் பாஜக 57 சதவீதம் பங்குகளை தன்வசப்படுத்தியுள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தான் முன்பை விட அதிக அளவில் நன்கொடையை திரட்டியுள்ளது. அதன்படி, 2021-2022ம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.528 கோடி நன்கொடை திரட்டியுள்ளது. மேலும், 2019ம் ஆண்டில், ரூ.97 கோடியும், 2020ம் ஆண்டில், 100 கோடியும், 2021ம் ஆண்டில் 42 கோடியும் பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் மார்ச் மாதம் வரை மொதத்தமாக ரூ.767 கோடியை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது.

இதில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளபட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.253 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.