இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தின் செக்-இன் கவுண்டரில் குழந்தைக்கான டிக்கெட் இல்லாததால் தம்பதியினர் தங்கள் குழந்தையைக் கைவிட்டுச் சென்றுள்ளனர்.
பென் குரியன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து குழந்தையோடு தம்பதியினர் பெல்ஜியத்தில் உள்ள பிரஸ்ஸல்ஸுக்கு ரியான் ஏர்லைன்ஸ் விமானத்தில் செக்-இன் செய்து கொண்டிருந்தபோது, அவர்கள் குழந்தையை விட்டுச் சென்றதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆன்லைன் முன்பதிவு செய்யும் போது, விமான முன்பதிவில் குழந்தைகளைச் சேர்க்க Ryanair ஏர்லைன்ஸ் அனுமதிக்கிறது. வயது வந்தவரின் மடியில் அமர்ந்து குழந்தை பயன் நிறுவனங்கள் $27 வசூலிக்கின்றன. அல்லது பெரியவர்கள் குழந்தை இருக்கையில் பயணம் செய்ய விரும்பினால், தனி ஏற்பாடு செய்யப்பட செய்து தரப்படுகின்றன.
ஆனால் இவை எவற்றையும் இந்த பயணிகள் பின்பற்றவில்லை. விமானத்திற்கான செக்-இன் மூடப்பட்டவுடன் தம்பதியினர் விமானத்திற்குத் தாமதமாக வந்துள்ளனர். மேலும், குழந்தைக்கான டிக்கெட்டை எடுக்க மறுத்ததுடன், தம்பதியினர் குழந்தையை விட்டுவிட்டு விமானத்திற்கான போர்டிங் கேட்டை அடையும் முன்பே செக்-இன் கவுண்டரிலிருந்த அதிகாரி, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளை எச்சரித்ததால் சோதனை சாவடியில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
பின் இஸ்ரேல் காவல்துறையால் விசாரணை நத்தப்பட்டு பின் பெற்றோரிடம் குழந்தை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.