தேயிலை தோட்டத்தில் உலாவிய சிறுத்தை – தொழிலாளர்கள் பீதி!

மஞ்சூர் அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாடியதை கண்ட தொழிலாளர்கள் அச்சமடைந்து பணிக்கு செல்லாமல் வீடு திரும்பினர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம்…

மஞ்சூர் அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாடியதை கண்ட தொழிலாளர்கள் அச்சமடைந்து பணிக்கு செல்லாமல் வீடு திரும்பினர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் சமீப
காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வனப்பகுதியில்
இருந்து வெளியேறும் சிறுத்தைகள் குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டங்களின்
அருகே உலா வருகின்றன.

அதே போல் மஞ்சூர் மின்வாரியம் அருகே உள்ள தண்டக்கார் லைன் பகுதியில் தேயிலை
தோட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல் தேயிலை பறிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது தேயிலை தோட்டத்தில் சிறுத்தை நடமாடியதை கண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்து பணிக்கு செல்லாமல் உடனடியாக வீடு திரும்பினர்.

மேலும் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாடும் காட்சியை பணிக்கு சென்ற சிலர்
தங்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தேயிலை தோட்டத்தில் நடமாடி வரும் சிறுத்தையின் நடமாட்டத்தை
கண்காணிக்க வேண்டுமென தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு
கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.