துணிவு படம் குறித்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் ட்வீட் செய்துள்ளார்.
அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் 3-வது படைப்பாகத் துணிவு வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்தை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். மேலும் அவரது நெகட்டிவ் ரோல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து வருகிறது. 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், துணிவு திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் கடந்த 8-ம் தேதி வெளியானது. படம் வெளியாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் துணிவு திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் தினேஷ் கார்த்திக் துணிவு படம் குறித்து தனது ரசிகரின் கேள்விக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி கொண்டிருந்தார். அப்போது, ரசிகர் ஒருவர், “துணிவு படத்தைப் பார்த்துட்டீங்களா? படம் எப்படி இருக்கு?” என கேள்வி எழுப்பினார். இதற்கு தினேஷ் கார்த்திக் சூப்பர் என பதில் அளித்துள்ளார்.
-ம.பவித்ரா