குஜராத் தெருக்களில் இரவில் சிங்கங்கள் கூட்டமாக உலவும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நள்ளிரவு நேரத்தில் 8 சிங்கங்கள் கூட்டமாக உலவும் வீடியோ அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், சிங்கங்கள் கூட்டமாக செல்கின்றன. அப்போது, அங்கு வந்த வாகனத்தின் வெளிச்சம் தெரிந்ததையடுத்து, சிங்கங்கள் திரும்பிச் செல்கின்றன. இந்தக் காட்சி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “மற்றொரு நாள், மற்றொரு பெருமை, குஜராத் தெருக்களில் நடைபயிற்சி” என்று சிங்கங்கள் கூட்டமாக உலா வருவதைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். அச்சமூட்டும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து, கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-ம.பவித்ரா








