முக்கியச் செய்திகள் விளையாட்டு

இந்திய-வங்கதேசம் இடையேயான ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா-வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்தியா-வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்தில் நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பி இருக்கின்றனர். முன்னணி வீரர்கள் திரும்பி இருப்பதால் அணி மேலும் வலுப்பெற்று இருக்கிறது. வேகபந்து வீச்சாளர் முகமது ஷமி சமீபத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது தோள் பட்டையில் காயம் அடைந்தார். அவரது காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் ஒருநாள் தொடரில் இருந்து நேற்று விலகினார். அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளது. வங்காளதேச அணியை பொறுத்தமட்டில் வழக்கமான கேப்டன் தமிம் இக்பால் காயம் காரணமாக விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக லிட்டான் தாஸ் கேப்டனாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமதுவும் காயத்தால் ஒதுங்கி உள்ளார்.

வங்கதேச அணி எப்போதும் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாட கூடியதாகும். இந்திய அணி கடைசியாக 2015-ம் ஆண்டு வங்கதேசம் சென்று 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் ஆடிய போது அந்த அணி 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. எனவே இந்திய அணி இந்த ஆட்டத்தில் கவனமுடன் விளையாட வேண்டும். மேலும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை 12 மணி நேரம் விசாரணை; காரணம் இதுதான்..

G SaravanaKumar

ஷாரூக்கான் படத்திலிருந்து விலகிய நயன்தாரா?

Halley Karthik

இடஒதுக்கீடு விவகாரத்தை ராமதாஸ் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறார்: பாலகிருஷ்ணன்

Niruban Chakkaaravarthi