பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பணியாளர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படாததால் பல பொதுத்துறை நிறுவனங்கள் சரிவை கண்டுள்ளது.
2021-22ன் வருடாந்திர பகுப்பாய்வு அறிக்கையின் படி, சந்தை மூலதனத்தின் மூலம் பட்டியலிடப்பட்ட முதல் 15 பொதுத்துறை நிறுவனங்களில் பெரும்பாலானவை தொடர்ந்து அவற்றின் எண்ணிக்கையில் குறைந்து காணப்படுகிறது. பணியாளர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தியதாக எஸ் பி ஐ லைஃப் இன்சுரன்ஸ் நிறுவனம் மற்றும் ஐ ஆர் சி டி எஸ் அறிவித்திருந்த நிலையில் அதன் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படாததால் பல பொதுத்துறை நிறுவனங்கள் சரிவை கண்டுள்ளது.
இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள செய்தியில் 2021-22 ம் ஆண்டில் சந்தை மூலதனத்தின் மூலம் பட்டியலிடப்பட்ட முதல் பத்து நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை சேர்த்துள்ளதாக அறிவித்தனர்.தனியார் துறை இந்த ஆண்டு சேவைகளில் அதிகபட்ச பணி நியமணம் கண்டதாக தெரிவித்தனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் மாருதி சுசுகி லிமிடெட் ஆகியவை அடங்கும்.

தேனா வங்கி மற்றும் விஜயா வங்கியின் இணைப்பு காரணமாக பேங்க் ஆஃப் பரோடா அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைத்து வருகிறது. பதினொறு ஆண்டுகளுக்கு முன்பு 3.83 லட்சமாக இருந்த இந்தியா லிமிடெட் ஊழியர்களின் எண்ணிக்கை பிறகு 2.48 லட்சமாக குறைந்தது. அதன்பின் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ் பி ஐ கடந்த 2017-18 ஆம் ஆண்டில் அதன் ஐந்து அசோசியேட் வங்கிகளையும் பாரதிய மகிளா வங்கியையும் இணைத்ததைத் தொடர்ந்து 71,000 ஊழியர்களைச் சேர்த்தபோது, அதன் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதேபோல் மின் உற்பத்தி நிறுவனமான என் டி பி சி யும் ஒரு தசாப்தத்திற்கு முன்பு தனது ஊழியர்களின் எண்ணிக்கையில் அதிகரித்திருப்பதாக கடைசியாக அறிவித்தது.
இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை 1,971 பேரை கொண்டிருந்த டிக்கெட் தளமான IRCTC, 2019-20 இல் 1,446 ஊழியர்களிடமிருந்து 2020-21 இல் 1,417 ஆகக் குறைந்துள்ளது.எஸ் பி ஐ லைஃப் இன்சூரன்ஸ் கடந்த பல ஆண்டுகளாக, மார்ச் 31, 2018 நிலவரப்படி 13,207 பேரில் இருந்து மார்ச் 31, 2022 நிலவரப்படி 18,515 நபர்களாக உயர்ந்து வருகிறது.







