நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோழித் தீவன மூலப்பொருட்கள் விலையால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கோழி பண்ணையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சிங்கராஜ் நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோழிப் பண்ணை தொழில் கடும் நெருக்கடியில் உள்ளது. கோழித் தீவன மூலப்பொருட்கள் விலையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் முட்டைக்கான உற்பத்தி செலவு கூட கிடைக்கவில்லை. இதனால் பல பண்ணையாளர்கள் தொழிலை விட்டு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோழித் தீவன மூலப்பொருட்கள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்த கோரிக்கைக்கு இதுவரை ஒன்றிய அரசு செவிசாய்க்கவில்லை. ஒன்றிய அரசுக்கு சொந்தமாக உள்ள உணவு பொருட்கள் கிடங்கில் சேதாரமடைந்து மனித பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லாத உணவு தானியங்களை கோழிப் பண்ணையாளர்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும். தமிழக கோழிப் பண்ணையாளர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் தமிழகம் முழுவதும் கோழிப்பண்ணை தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் தடையில்லாத சான்றிதழ் பெற வேண்டும் என ஒன்றிய அரசு கூறியிருந்தது.
இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்து வந்தன. தடையில்லா சான்றிதழ் சிரமமின்றி பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அண்மைச் செய்தி: ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஏன் ஆதரவு? – எஸ்டிபிஐ தலைவர் முபாரக் விளக்கம்
இதனை தொடர்ந்து நடைமுறை சிக்கல்களை நீக்கி தமிழகம் முழுவதும் கோழிப் பண்ணை தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் அந்தந்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகி சான்றிதழ் பெற நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கு கோழிப் பண்ணயாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உரிய ஆவணங்களை வழங்கி உடனடியாக சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்தார்.