முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

இந்திய அளவில் டிரெண்டிங்கில் மாஸ் காட்டும் மார்டின் டீசர்..!!

நடிகர் துருவா சர்ஜா நடிப்பில் உருவாகியிருக்கும் மார்டிசம் படத்தின் டீசர் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

வாசவி என்டர்பிரைசஸ் (Vasavi Enterprises) சார்பில் தயாரிப்பாளர் உதய் கே மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் ஏ.பி.அர்ஜுன் இயக்கத்தில், ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது ‘மார்டின்’ திரைப்படம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்கவும் : “ஆளுநர் மாளிகை சிறை கூடாரமாக மாறிவிடும்”- கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, பிப்ரவரி 23ம் தேதி, பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில், தயாரிப்பாளர் உதய் கே மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜூன், இயக்குநர் ஏ.பி.அர்ஜூன், நடிகர் துருவா சர்ஜா, நடிகை வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உட்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஆக்சன் கதையை களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர், திரை கொள்ளாத ஆக்சன் காட்சிகளின் பிரமாண்டத்தையும், துருவா சர்ஜாவின் கதாப்பாத்திரத்தையும், படத்தை பற்றிய சிறு அறிமுகத்தை தருவதாகவும் அமைந்திருந்தது. இவ்விழாவில் வெளியிடப்பட்ட  டீசரை ரசிகர்கள் உற்சாக கரவொலியுடன் வரவேற்றனர்.

வெளியான நொடியிலிருந்து இணையம் முழுக்க தீயாக பரவி வரும் டீசரை, இந்தியா முழுக்கவே ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்க்ள். தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் உருவான இப்படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்து இன்றுவரை டிரெண்டிங்கில் இருந்து வருவது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தொலைந்துபோன சாவி: உடைக்கப்பட்ட வாக்குப்பெட்டி

G SaravanaKumar

இந்தியாவில் புதிதாக 15,823 பேருக்கு கொரோனா

Halley Karthik

AK62 படத்தில் அடுத்தடுத்து ஏற்படும் திருப்பங்கள்: குழப்பத்தில் அஜித் ரசிகர்கள்!

Yuthi