லண்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா 70 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடந்து வரும் நிலையிலும், மற்றொரு புறத்தில் தொற்று பாதிப்பும் அதிகரிகத்து வருகிறது. இதுகுறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, லண்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய கொரோனா தொற்று 70 நாடுகளில் பரவி உள்ளதாக கூறியுள்ளது.
மேலும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய தொற்று 31 நாடுகளில் பரவி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







