பாஜகவில் இணைந்தார் நமச்சிவாயம்!

நாராயணசாமி ஆட்சியில் புதுச்சேரி பின்னோக்கி சென்றுவிட்டதாக பாஜகவில் இணைந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம், டெல்லியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங்…

நாராயணசாமி ஆட்சியில் புதுச்சேரி பின்னோக்கி சென்றுவிட்டதாக பாஜகவில் இணைந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபத்தில் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம், டெல்லியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நமச்சிவாயம், வளமான புதுச்சேரியை உருவாக்கவே பாஜகவில் இணைந்ததாக தெரிவித்தார். உலக அளவில் இந்தியாவை தலை நிமிர வைத்தவர் பிரதமர் மோடி என புகழ்ந்துரைத்த நமச்சிவாயம், நாராயணசாமி ஆட்சியில் புதுச்சேரி பின்நோக்கி சென்றுவிட்டதாக குற்றம்சாட்டினார்.

புதுச்சேரி மாநிலத்தில் விரைவில் பாஜக ஆட்சி மலரும் என்றும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply