பாகிஸ்தானில் லேண்ட் க்ரூஸர் கார் ஓட்டும் 5 வயது சிறுவன்; வைரல் வீடியோ

பாகிஸ்தானில் தனியாக லேண்ட் க்ரூஸ்ர் கார் ஓட்டும் 5 வயது சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானின் முல்தான் பகுதியில் 5 வயது சிறுவன் ஒருவன் லேண்ட் க்ரூஸர் கார் ஓட்டிச் சென்றுள்ளான்.…

பாகிஸ்தானில் தனியாக லேண்ட் க்ரூஸ்ர் கார் ஓட்டும் 5 வயது சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானின் முல்தான் பகுதியில் 5 வயது சிறுவன் ஒருவன் லேண்ட் க்ரூஸர் கார் ஓட்டிச் சென்றுள்ளான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நபர் ஒருவர், அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். 27 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் நின்று கொண்டே கார் ஓட்டுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து அந்த சிறுவனின் பெற்றோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply