முக்கியச் செய்திகள் உலகம்

விரைவில் புதிய ’ட்ரை ஃபோல்டபள்’ ஸ்மார்ட்போன்? – சாம்சங்கின் அடுத்த அதிரடி!

சாம்சங்கின் அடுத்த அதிரடி வெளியீடாக விரைவில் புதிய ’ட்ரை ஃபோல்டபள்’ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் அதன் வரவிருக்கும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 சாதனங்களுடன் புதிய ட்ரை-ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை வெளியிடும் என்று கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பல்வேறு தொழில்நுட்ப நிபுணர்கள் இந்த தகவல் குறித்து இணையத்தில் விவாதித்து வருகின்றனர். சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு Galaxy S23 FE ஐ அறிமுகப்படுத்தாது என்று SamMobile தெரிவித்துள்ளது.

ட்ரை-ஃபோல்டிங் கேலக்ஸி சாதனம் என்னவாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது சிறிய ஸ்மார்ட்போனிலிருந்து பெரிய திரை டேப்லெட்டாக மாறும், அதன் மடிக்கக்கூடிய OLED திரை இரண்டு கீல்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்திய எல்லைக்கு அருகில் அணை கட்டும் சீனா – வெளியான புகைப்படங்கள்

Web Editor

திமுகவில் இணைந்த அதிமுக வெற்றி வேட்பாளர்

G SaravanaKumar

டெல்டா மாவட்டங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆய்வு

EZHILARASAN D