முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாப்புலர் ப்ரண்ட் அலுவலகங்களில் என்ஐஏ சோதனை – இந்திய தேசிய லீக் கண்டனம்

பாப்புலர் ப்ரண்ட் அலுவலகங்களில் அமலாக்கத் துறை NIA சோதனை மேற்கொண்டதற்கு இந்திய தேசிய லீக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்திய தேசிய லீக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மீது காழ்ப்புணர்வோடு ஒன்றிய பாஜக அரசு அமலாக்கத் துறையையும், என்.ஐ.ஏவையும் ஏவிவிட்டு சோதனை என்ற பெயரில் அச்சுறுத்துவதும் அதன் நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் பதிவு செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளதை இந்திய தேசிய லீக் வன்மையாக கண்டிக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இயற்கை பேரிடர் காலங்களில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களை காப்பதில் அரசு நிர்வாகங்களுடன் இணைந்து பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு அதற்காக அரசின் பாராட்டுகளைப் பெற்ற ஓர் அமைப்பின் மீது ஒடுக்குமுறையை ஏவுவது ஜனநாயக விரோதம்.

யஷ்வந்த் ஷிண்டே எனும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர் நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்பு தீவிரவாத சம்பவங்களில் இந்துத்துவ அமைப்புகள் ஈடுபட்டதை ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தும் அதை விசாரிக்காத NIA, சட்டத்தின் அடிப்படையில் மக்களுக்காக இயங்கும் ஒரு ஜனநாயக அமைப்பின் மீது பாய்வது ஒருதலைபட்சமானது. பாப்புலர் ப்ரண்ட் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதத்தை இந்திய தேசிய லீக் வன்மையாக கண்டிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வெளியானது வசூல் மன்னனின் ‘வாரிசு’ first look!

Vel Prasanth

மருத்துவமனையில் மதுசூதனின் நலம் விசாரித்த இபிஎஸ், சசிகலா

Gayathri Venkatesan

பேரூராட்சிகளில் குடிநீர் வழங்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு

EZHILARASAN D