முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

என் வாழ்வில் மிகவும் வேதனையான நாட்கள் – நடிகர் பாலா உருக்கம்

நடிகர் பாலா இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்துள்ளதாக செய்திகள் பரவி வரும் நிலையில், விளக்கமளித்துள்ள அவர் இது தன் வாழ்வில் மிகவும் வேதனையான நாட்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 

நடிகர் பாலா தமிழில் ‘அன்பு’ படம் மூலம் அறிமுகமானார். இவர், வீரம் படத்தில் அஜித்குமாரின் தம்பிகளில் ஒருவராக நடித்து பிரபலமடைந்தார். மேலும், ‘காதல் கிசுகிசு’, ‘அம்மா அப்பா செல்லம்’, ‘கலிங்கா’ உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ள இவர், 2016-ம் ஆண்டு பாடகி அம்ருதாவுடன் திருமணமாகி விவாகரத்தில் முடிந்தது. பின்னர் டாக்டரான எலிசபெத்தை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், எலிசபெத்தையும் பாலா பிரிந்து விட்டதாகவும், அவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் மலையாள ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாலா சமூக வலைத்தளத்தில் நேரலையில் வந்து விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறிய அவர், ”இது நிஜமாகவே வேதனை அளிக்கிறது. திருமணம் ஒருமுறை தோல்வியுற்றால், அதை சிந்திக்காமல் இருக்கலாம். ஆனால் இரண்டாவது முறை தோல்வியுற்றால் யோசிக்க ஆரம்பிக்கிறோம்.

என்னை இந்த நிலைக்குத் தள்ளிய ஊடகங்களுக்கு நன்றி. நீங்கள் வற்புறுத்தினாலும் நான் எலிசபெத்திடம் பேசமாட்டேன். எலிசபெத் என்னை விட சிறந்தவர். தயவு செய்து அவருக்கு கொஞ்சம் நிம்மதி கொடுங்கள். நான் மாறிக்கொள்கிறேன். இது என் வாழ்வில் மிகவும் வேதனையான நாட்கள். நான் எனக்காக இப்போது பேச முயற்சிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விடும்: முதல்வர்!

G SaravanaKumar

பிரபஞ்சத்தின் ஆச்சரியங்களை வெளிக்கொணரும் நாசாவின் முயற்சி

G SaravanaKumar

ரூ.1,000-ஐ கடந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை

EZHILARASAN D