முக்கியச் செய்திகள் தமிழகம்

கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவிகள் மாயம் – போலீசார் விசாரணை

திண்டுக்கல் அருகே பட்டிவீரன்பட்டி பகுதியில் இரண்டு பள்ளி மாணவிகள் மாயமான சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே காந்திபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் செல்வஹர்ஷனா(17), மற்றும் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சாமகோட்டையைச் சேர்ந்த செந்தில் என்பவரது மகள் ஞானதர்ஷினி (17)
ஆகிய இருவரும் தோழிகளாக பழகி வந்தனர். இவர்கள் பட்டிவீரன்பட்டியில் உள்ள
அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் நேற்று மாலை டியூசன் செல்வதாக கூறிவிட்டு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. டீயூசனுக்கும் போகவில்லை. இருவரும் தீபாவளிக்கு வாங்கிய புத்தாடையை மட்டும் பேக்கில் வைத்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் மாணவி
செல்வஹர்ஷனா, தனது வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் அப்பா,
அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். என்னைத் தேட வேண்டாம் என எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செல்வஹர்ஷனாவின் தாயார் முத்துலட்சுமி, பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சங்கரேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவிகளை தேடி வருகின்றனர். இதுகுறித்து நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் உத்தரவின்பேரில், தனிப்படை அமைத்து மாணவிகளை தேடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையின் போது, கடிதம் எழுதி வைத்துவிட்டு, இரண்டு மாணவிகளும் ஒரே நேரத்தில் காணாமற்போன  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரபல ரவுடி படப்பை குணா சரணடைந்தார்

G SaravanaKumar

பெண் காவலரின் மகள் எடுத்த விபரீத முடிவு!

Arivazhagan Chinnasamy

தேர்தல் பிரச்சாரத்திற்கு, அதிமுகவிடம் இருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை! – பிரேமலதா விஜயகாந்த்

Nandhakumar