முக்கியச் செய்திகள் விளையாட்டு

டி20 உலக கோப்பை; டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான முதல் டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குரூப்1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

8-வது டி20 உலக கோப்பை சூப்பர்12 சுற்றில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்தியா அணியில் ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், முகமது ஷமி, ஆர்.அஸ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் அணியில், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், ஷான் மசூத், ஹைதர் அலி, இப்திகர் அகமது, ஆசிப் அலி, முகமது நவாஸ், ஷதப் கான், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

32 கிராமி விருதுகளை வென்று சாதனை படைத்த பியோன்சே!

Web Editor

3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகும் பிரபல ஐடி நிறுவனம்

Web Editor

திரையரங்குகளை திறக்க அனுமதி: முதலமைச்சருக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி

Gayathri Venkatesan