”வணங்கான் படத்தின் பாதிப்பு வந்து விடக்கூடாது என்று நினைத்தேன்” – ரெட்ட தல படம் குறித்து அருண்விஜய் ஓபன் டாக்…!

ரெட்ட தல திரைப்படத்தில் நடிக்கும் போது வணங்கான் படத்தின் பாதிப்பு வரக்கூடாது என்று நினைத்ததாக நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார்.

அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘ரெட்ட தல’. கிரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ள இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். டிசம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.

இதனை முன்னிட்டு நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அருண் விஜய், ”இதற்கு முன்பு தடம் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறேன். ஆனாலும், ரெட்ட தல, வேறு மாதிரியான இரட்டை வேடம். ஒருவர் கெட்டவர், இன்னொருவர் இன்னும் கெட்டவர் என்ற மாதிரி நகரும். குறிப்பாக, கிளைமாக்ஸ் முன்னதாக ஒரு டுவிஸ்ட் இருக்கிறது. அது பேசப்படும். இந்தப் படத்தில் அதிக ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. அது நன்றாகவே வந்துள்ளது. கண்டிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்.

பாலாவின் வணங்கான் படத்துக்குபின் இதில் நடித்தேன். அந்த பட பாதிப்பு இந்த பட கேரக்டரில் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். சாம் சி.எஸ் இசையில் ஒரு பாடலை தனுஷ் பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். அந்த பாடலை ஏஐயில் உருவாக்கி அவரிடம் போட்டு காண்பித்தோம். உடனே ஓகே சொன்னார். படத்தின் சில காட்சிகளை பார்த்து பாராட்டினார்.

என்னை அறிந்தால் படத்தில் அஜித்சாருடன் வில்லனாக நடித்தேன். இட்லிகடையில் வில்லனாக நடித்தேன். இப்போது பல படங்களில் ஹீரோவாக நடிக்கிறேன். படத்தின் தலைப்பு ரெட்ட தல. இது குறித்து அஜித்சாருடன் பேசவில்லை. இந்த தலைப்பை ஏ.ஆர்.முருகதாஸ்தான் ‘அஜித்’ சாருக்காக வைத்து இருந்தார். அதை, அவர் சிஷ்யரான இந்த பட இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் வாங்கினார். படத்தின் கதைக்கு இது சரியான பொருத்தமாக இருக்கும்” என்றார்.

தொடர்ந்து நடிகை சித்தி இத்னானி பேசியதாவது ‘‘ இந்த படத்தில் எனக்கு மிகவும் முக்கிய கதாபாத்திரம். கண்டிப்பாக அது உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். நானும் தமிழ் கற்றுக் கொண்டே இருக்கிறேன். இன்னும் சில நாட்களில் முழுவதுமாக கற்றுக் கொள்வேன் என்று நம்புகிறேன்.’’’என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.