கண்ணில் ஒளிரும் தேசிய கொடி… பாராட்டு மழையில் நனையும் புகைப்படக் கலைஞர்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையைச் சேர்ந்த மொபைல் ஃபோட்டோகிராஃபர் ஒருவர் எடுத்த புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.  சுதந்திர தினம் நெருங்கியுள்ள நிலையில் அதனை கொண்டாடும் விதமாக, கோவையைச் சேர்ந்த மொபைல் ஃபோட்டோகிராஃபர் பாலச்சந்தர் என்பவர்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையைச் சேர்ந்த மொபைல் ஃபோட்டோகிராஃபர் ஒருவர் எடுத்த புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. 

சுதந்திர தினம் நெருங்கியுள்ள நிலையில் அதனை கொண்டாடும் விதமாக, கோவையைச் சேர்ந்த மொபைல் ஃபோட்டோகிராஃபர் பாலச்சந்தர் என்பவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.

கணினி திரையில் தேசியக் கொடியை மிகப் பெரியதாக வைத்து, ஒரு நபர் அதை நெருங்கிப் பார்க்கும்படி செய்து, அவரது கண்களில் கொடியின் பிரதிபலிப்பை மிக அருகில் சென்று மொபைல் கேமராவைப் பயன்படுத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இந்த படைப்பு, தேசியக் கொடி மீதான அன்பை வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பாலச்சந்தர் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் பலரும் இவரது புதிய முயற்சியை பாராட்டி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.