ஐபிஎல்: அடுத்த சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியது ஐதராபாத் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த 37-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி யுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதியது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப்…

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த 37-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி யுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதியது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். இருவரையும் ஹோல்டர் வீழ்த்தினார். ராகுல் 21 ரன்களிலும் அகர்வால் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த கெயில் மற்றும் மார்க்ரம் அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். ஆனால் 14 ரன்கள் எடுத்த கெயில் ரஷீத் கான் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் ஆனார். அடுத்துவந்த நிகோலஸ் பூரன் 8 ரன்னிலும் மார்க்ரம் 27 ரன்கள் எடுத்தும் விக்கெட்டை இழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய ஐதராபாத் அணியின் ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 126 ரன்கள் என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், அதிரடி வீர கேன் வில்லியம்சன் ஆகியோரின் விக்கெட்டு களை ஷமி வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே கேதர் ஜாதவ் உட்பட யாருமே நிலைத்து நிற்கவில்லை.

விருத்திமான் சாஹாகாவுடன் இணைந்த ஜேசன் ஹோல்டர் மட்டும் சில நிமிடம் அதிரடி காட்டினார். ஆனால், அதுவும் நிலைக்கவில்லை. சாஹா 31 ரன்களில் ரன் அவுட் ஆனதால் இந்த ஜோடி பிரிந்தது. அடுத்து வந்தவர்களும் ரன்குவிக்க முடியாமல் ஆட்டமிழக்க, அந்த அணியால் 120 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி தோல்வி அடைந்தது. 5 சிக்சர்களுடன் 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்த ஜேசன் ஹோல்டர் இறுதி வரை களத்தில் இருந்தார்.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலை யில், ஷமி 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த தோல்வியின் மூலம் 8 வது தோல்வியை தழுவிய ஐதராபாத் அணி, அடுத்த சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.