நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

நாடாளுமன்ற அனைத்துக்கட்சியின் அவைகுழு தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக்கட்சியின் அவைகுழு தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற விவகாரத்துறை…

நாடாளுமன்ற அனைத்துக்கட்சியின் அவைகுழு தலைவர்கள் கூட்டம் தொடங்கியது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக்கட்சியின் அவைகுழு தலைவர்கள் கூட்டம் தொடங்கியது.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் தொடங்கிய அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் பாஜக சார்பில் மாநிலங்களவைத் தலைவர் பியூஸ் கோயல், ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் அதிரஞ்சன் சவுத்ரி மற்றும் மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அதேபோல் திமுக சார்பில் டி.ஆர்.பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோரும், சிவசேனா கட்சி சார்பில் சஞ்சய் ராவத் கலந்துகொண்டுள்ளார். சிரோன்மணி அகாலி தளம் சார்பில் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தொடரில், எரிபொருள் விலையுயர்வு, நீட், விவசாய மசோதா உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.