வட இந்தியாவில் இருந்து கூலி வேலைக்காக அன்றாடம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் அன்றைக்கு மொழிப்போர் தியாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என துரை வைகோ பேசியுள்ளார்.
மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளையொட்டி, சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள
மொழிப்போர் தியாகிகளான நடராசன், தாளமுத்து ஆகியோரது நினைவு மண்டபத்தில்,
மதிமுக தலைமை நிலைய செயலாளரான துரை வைகோ மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தாய்க்கு நிகரான தமிழ் மொழிக்கு
ஆதரவாக, இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து நூறாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற
மொழிப் போரில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகின்ற நாள் இன்று என்றார்.
மேலும், மொழிக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்திக்கு எதிரான உணர்ச்சி மங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வீர வணக்க நாள் நிகழ்ச்சியை நடத்துகிறோம். மொழிப்போரை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை என கூறினார்.
அத்துடன், தாய்மொழி தமிழை அழித்து, வடமொழி இந்தியைத் திணிப்பதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். வட இந்தியாவிலிருந்து கூலி வேலைக்காக லட்சக்கணக்கான பேர் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற ஒரு நிலை வரக்கூடாது என்று தான் மொழிப்போர் தியாகிகள் பாடுபட்டு தமிழ் மொழியைக் காத்துள்ளனர் என கூறினார்.
மேலும், வரக்கூடிய வாரங்களில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதிமுக சார்பில்
பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். இந்தியா முழுவதும் சமநிலை இறக்க வேண்டும்
இந்தி படித்தால் தான் நாட்டில் முன்னேற முடியும் என்ற சூழலை எதிர்க்கிறோம்”,
என்றார்.