ரயில்வே எழுத்தருக்கு இருக்கையை தந்து கவுரவித்த மேலாளர்

திருச்சியில் பணி ஓய்வு பெற்ற கடைநிலை ஊழியருக்கு, ரயில்வே உயர் அலுவலர் தனது இருக்கையை கொடுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். திருச்சி தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், வணிகப் பிரிவில் பதிவேடுகளை பதிவிடும் எழுத்தராக…

திருச்சியில் பணி ஓய்வு பெற்ற கடைநிலை ஊழியருக்கு, ரயில்வே உயர் அலுவலர் தனது இருக்கையை கொடுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருச்சி தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், வணிகப் பிரிவில் பதிவேடுகளை பதிவிடும் எழுத்தராக பணிபுரிந்தவர் நாகராஜன். வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான அவர், புதன்கிழமை மாலை பணி ஓய்வு பெற்றார்.

அவரது பணி ஓய்வு பிரிவு உபசார நிகழ்வின்போது அவரை கௌரவிக்கும் விதமாக, அவரது அலுவலகத்தில், உயர் அலுவர்களில் ஒருரான திருச்சி கோட்ட வணிக மேலாளர் மோகனப்ரியா, நாகராஜனை தனது இருக்கையில் அமரச்செய்து அவரை பாராட்டினார். அதோடு அவரது குடும்பத்தினருடன் அருகில் நின்று புகைப்படமும் எடுத்துகொண்டார்.

ரயில்வே துறையில் கடைநிலை ஊழியராக, பணிபுரிந்து, பணிஓய்வு பெற்ற ஊழியருக்கு அலுவலக உயரதிகாரி தனது இருக்கையில் அமர வைத்து கெளரவித்தது, ரயில்வே ஊழியர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.