வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது!

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கிழக்கு-மத்திய வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “ நேற்று கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, இன்று (24 அக்டோபர் 2026) காலை 05:30 மணி நிலவரப்படி, கிழக்கு-மத்திய வங்கக் கடலில் ‘நன்கு வரையறுக்கப்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக’ (Well Marked Low Pressure Area) வலுவடைந்துள்ளது.

இது இன்று (24 அக்டோபர் 2026) அதே பகுதியில் நீடித்து, ‘காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக’ (Depression) வலுவடையக்கூடும். அதனைத் தொடர்ந்து, இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 25 அன்று ‘ஆழமான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும்’ (Deep Depression), அக்டோபர் 26 காலைக்குள் மேற்கு-மத்திய வங்கக் கடலில் ‘சூறாவளி புயலாகவும்’ (Cyclonic Storm) மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் இந்த அமைப்பு, மேலும் வலுவடைந்து, அக்டோபர் 28, 2026 காலை வாக்கில் ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அருகில், மேற்கு-மத்திய வங்கக் கடற்பகுதியை வந்தடையக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.