வட்டாட்சியர் அலுவலகத்தில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் வட்டாட்சியர் விழிப்புணர்வு பேனர் வைத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா
மாற்றுதல், வாரிசு சான்றிதல் , இறப்பு சான்றிதல், ஓ.பி.சி உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெற அதிகளவில் மாணவர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இதை பயன்படுத்திக் கொண்ட சில இடைத்தரகர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தின் எதிரே வந்து நின்று பொது மக்களிடமிருந்து வரும் மனுக்களை வாங்கிக்கொண்டு, அலுவலகத்தில் பணியில் உள்ள அதிகாரிகள் தனக்கு தெரிந்தவர்கள் என்றும், உடனடியாக தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற்று தருவதாக கூறி பொது மக்களிடம் பணம் வாங்கியுள்ளனர்.
இதை அறிந்த போச்சம்பள்ளி வட்டாட்சியர், அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதியில் அறிவிப்பு பலகை வைத்துள்ளார். அப்பலகையில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் இருப்பதால், அவர்களை நம்பி ஏமாறாமல், பொதுமக்கள் நேரடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி சான்றிதழ்களை பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
கு.பாலமுருகன்







