6 அடி நீள பாம்பை கயிறு போல் இழுத்து வந்த சிறுமி! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சிறுமி ஒருவர் எந்த பயமும் இல்லாமல் தன்னை விட நீளமான கிட்டதட்ட 6 அடி நீளமுள்ள பாம்பைப் பிடித்துக் கொண்டு எளிதாக வீட்டுக்குள் நுழையும் அதிர்ச்சி வீடியோ ஒன்று, தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.…

சிறுமி ஒருவர் எந்த பயமும் இல்லாமல் தன்னை விட நீளமான கிட்டதட்ட 6 அடி நீளமுள்ள பாம்பைப் பிடித்துக் கொண்டு எளிதாக வீட்டுக்குள் நுழையும் அதிர்ச்சி வீடியோ ஒன்று, தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த உலகில் ஆபத்தான விஷ உயிரினங்களில் பாம்பும் மிக முக்கியமான ஒன்று. சில வகை பாம்புகள் நம்மை தீண்டிய மறுகணமே மரணம் நிச்சயம் என்பதாலேயே, பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என நம் முன்னோர்கள் கூறி வந்தார்கள். அப்படி இருக்கும் போது ஒரு சிறுமி எந்த பயமும் இல்லாமல் கிட்டதட்ட 6 அடி நீளமுள்ள பாம்பை கயிறு போல பிடித்துக்கொண்டு வீட்டிற்குள் நுழையும் அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சிறுமி தன்னை விட நீளமான பாம்பை பிடித்துக்கொண்டு எளிதாக வீட்டிற்குள் நுழையும் போது, இதை பார்த்து வீட்டிற்குள் இருந்த பெண்கள் பயந்து மற்ற குழந்தைகளை தூக்கிக் கொண்டு அங்கிருந்து செல்ல ஆரம்பிக்கின்றனர், அப்போது அங்கு வந்த ஒருவர் பாம்பை கையில் பிடித்திருந்த சிறுமியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து செல்வதாக முடிகிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கமான First_Love_Diction பதிவேற்றியது முதலே கிட்டத்தட்ட 17 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று லைக்குகளை அள்ளி வரும் நிலையில், இந்த சம்பவம் எங்கு நடந்தது? பாம்பை இழுத்துச் செல்லும் துணிச்சலான அந்த சிறுமி யார் என்பது குறித்த விவரங்கள் அந்த வீடியோவிலோ அல்லது தலைப்பிலோ குறிப்பிடப்படவில்லை.

https://www.instagram.com/reel/CuJUhHYOE-V/?utm_source=ig_web_copy_link

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.