2008 மற்றும் 2012-ல் அடுத்தடுத்த யூரோ கோப்பைகளை வென்றதற்கும் காரணமாக இனியஸ்டாவே திகழ்ந்தார். அவரைப் பற்றி பார்ப்போம்…
முதல் உலகக்கோப்பையை கையில் ஏந்தும் கனவோடு களத்தில் இறங்கின நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய இரண்டு அணிகளும்… அசாத்தியமான ஃபார்மில் இருந்த ஸ்பெயின் அணிக்கு, நெதர்லாந்து அணி ஈடு கொடுக்காது என்பதே அனைவரின் கணிப்பாக இருந்தது. ஆனால், மிகச்சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய நெதர்லாந்து, ஸ்பெயின் அணியின் வியூகத்தை முறியடித்தது.. ஆட்டம் 90 நிமிடங்களைக் கடந்தும் கோல் இல்லாததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
அப்போதும் ஸ்பெயினுக்கு தடங்கலாக நின்றனர் நெதர்லாந்து வீரர்கள்… கூடுதல் நேரமும் முடிந்து ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் செல்ல 4 நிமிடங்களே இருந்தது.. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அந்த மிட்பீல்ட் மேஸ்ட்ரொ, நெதர்லாந்து அணியின் தடுப்பு அரணை முறியடித்து அபாரமாக கோலை அடித்தார்…. ஸ்பெயின் அணியின் கோப்பை தாகம் தணிந்தது…
ஸ்பெயின் அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல காரணமாக இருந்த அந்த வீரர் ஆந்த்ரேஸ் இனியஸ்டா… முன்கள வீரர்களைப் போன்று, கோல் அடிக்கும் திறனும்…. நடுகள ஆட்டக்காரர்களைப் போன்று ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆளுமையும் ஒருங்கே கொண்டவர் இனியஸ்டா…

Tiki Taka என்று சொல்லப்படும் ஒன் டூ ஒன் பாஸ்கள் மூலம், எதிரணியின் தடுப்பாட்டத்தை உடைத்து முன்னேறும் ஸ்பெயின் அணியின் வியூகத்திற்கு மையம் இவர் தான்… 2008 மற்றும் 2012-ல் அடுத்தடுத்த யூரோ கோப்பைகளை வென்றதற்கும் காரணமாக இனியஸ்டாவே திகழ்ந்தார்.. 
புகழ்பெற்ற பார்சிலோனா கிளப்பில் பல மகுடங்களை சூடியபோதும்… தனது தேசத்தின் ஒட்டுமொத்த கனவையும் நனவாக்கும் விதமாக 2010 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அவர் அடித்த கோலே இனியஸ்டாவின் பெயரை வரலாற்றில் இடம்பெறச்செய்தது..







