தமிழ்நாட்டில் ’தி கேரளா ஸ்டோரி’ படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பதிலளிக்க, தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மேற்குவங்கத்தில் தடை செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு, தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மேற்குவங்கம் மற்ற மாநிலங்களை விட வித்தியாசமானது இல்லை என்று கூறிய நீதிபதிகள், அங்கு படத்திற்கு ஏன் தடை விதிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டனர். மேலும், தமிழ்நாட்டில் ”தி கேரளா ஸ்டோரி” திரையிடப்பட்ட திரையரங்குகள் தாக்கப்பட்டது குறித்து பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : கர்நாடகா அரியணை யாருக்கு? நாளை காலை விறுவிறு வாக்கு எண்ணிக்கை….!
திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும்போது நடவடிக்கை எடுக்காமல் தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருந்தது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது பொது அமைதி தொடர்பான விவகாரம் என்பதால், திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறதா என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க அறிவுறுத்தினர். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மே 20 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.







