முக்கியச் செய்திகள் குற்றம்

பல கோடி ரூபாயை சுருட்டி கொண்டு தப்பியோடிய நகைக்கடை உரிமையாளர்?

சேலத்தில் நகைக்கு அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாயை சுருட்டி கொண்டு தப்பியோடிய நகைக்கடை உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சேலத்தில், தனியார் நகைக்கடையில் பணம் மற்றும் தங்கத்தை டெபாசிட் செய்தால், ஒரு சவரன் தங்கத்திற்கு மாதம் தோறும் 600 ரூபாய் வட்டி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, ஏராளமானோர் இதில் பணம் மற்றும் நகைகளை டெபாசிட் செய்துள்ளனர்.

இந்நிலையில் , சில மாதங்களாக அனைவருக்கும் முறையாக வட்டி பணம் வழங்கி வந்த நகைக்கடை, கடந்த 3 மாதங்களாக வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து வாடிக்கையாளர்கள் கேட்டு வந்த நிலையில், கடையின் உரிமையாளர் நகை, பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவாகி உள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைச் செய்தி: கடலூரில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 இலட்சம் நிதியுதவி

இதனால் பாதிக்கப்பட்டவர்கள், பொன்னாமாபேட்டை அருகே உள்ள நகைக்கடையின் உறவினர் வீட்டை முற்றுகையிட்டு, பலகோடி ரூபாய் ஏமாற்றியதாக குற்றம்சாட்டினர். தகவலறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

ரஷ்யா-உக்ரைன் போர்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

Halley Karthik

பேருந்தில் பயணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Ezhilarasan

பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான வகையில் படியில் தொங்கிக் கொண்டு பயணம்

Halley Karthik