முக்கியச் செய்திகள் தமிழகம்

கடலூரில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 இலட்சம் நிதியுதவி

கடலூர் அருகே கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், விளையாடி கொண்டிருந்த 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம், வடக்கு ராமாபுரம் சமத்துவபுரம் பகுதியில் பழமையான கட்டடம் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அகதிகள் மற்றும் திருநங்கைகளுக்காக கட்டப்பட்டிருந்த நிலையில், பராமரிப்பு இன்றி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கட்டடத்தின் அருகே சிறுவர்கள் சிலர் இன்று விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், அந்த பகுதியை சேர்ந்த வீரசேகர் மற்றும் சதிஷ்குமார் ஆகிய இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த புவனேஷ் என்ற சிறுவன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்தி: தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணி இடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி

இதனிடையே, கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிறுவர்களின் மரணச்செய்தியை கேட்டு மிகுந்த துயரமடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்த சிறுவன் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாயும் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

இனி மதுபானம் வாங்க வருபவர்கள் இதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்!

Halley Karthik

’புனித் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’: நடிகர் சூர்யா

Halley Karthik

மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி இல்லாமல் இனி அரசு கட்டடங்கள் கட்டக் கூடாது: உயர் நீதிமன்றம்