அரியலூர் மாணவி விவகாரத்தில் மதம் சார்ந்த பிரச்சாரங்களில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடவில்லை என மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை அளித்துள்ளார்.
அரியலூர் மாணவி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்மந்தப்பட்ட பள்ளிக்கே சென்று நேரடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளித்துள்ளார். இந்த அறிக்கையில், குறிப்பிட்ட பள்ளியில் கிறிஸ்துவ மாணவர்களை விட இந்து மாணவர்களே அதிகளவில் கல்வி பயில்கின்றனர் என்றும், பள்ளியில் பயின்ற மாணவர்களிடம் இருந்து மதம் சார்பாக இதுவரை புகார்கள் எதுவும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: பல கோடி ரூபாயை சுருட்டி கொண்டு தப்பியோடிய நகைக்கடை உரிமையாளர்?
மேலும், முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு மதம் சார்பான எந்த புகார்களும் பெறப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மதரீதியான பிரச்சாரங்கள் தலைமையாசிரியராலோ, மற்ற ஆசிரியர்களாலோ செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







