டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று மிக கடுமையாக சரிந்துள்ளது. இன்று வர்த்தகத்தின்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 பைசா சரிந்து 77.82 அளவுக்கு குறைந்தது. வங்கிகளுக்கு…

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று மிக கடுமையாக சரிந்துள்ளது. இன்று வர்த்தகத்தின்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 பைசா சரிந்து 77.82 அளவுக்கு குறைந்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணியில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் பலவீனமாக 77.81 உடன் தொடங்கியது. பின்னர், 77.82 ஆக சரிவை சந்தித்தது. இதுவரை அமெரிக்க டாலருக்கு நிகராக இதுபோன்ற சரிவை இந்திய ரூபாய் சந்தித்ததில்லை. முடிவில் 8 பைசா சரிவுடன் 77.82 அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வியாழக்கிழமை 6 பைசா அளவுக்கு சரிந்து 77.74 ஆக இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டு மூலதனம் வெளியேற்றம் போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டு முதலீடு வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால் இன்று இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.