“ரம்மிக்கான அவசர தடை சட்டம் வேண்டும்”

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசர தடை சட்டம் பிறப்பிக்கக் குழு அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கு, பாமக முழு ஆதரவளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசர தடை சட்டம் பிறப்பிக்கக் குழு அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கு, பாமக முழு ஆதரவளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழகத்தில் 23 உயிர்களை நாம் இழந்துள்ளோம். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணம் நகை உள்ளிட்ட உடைமைகளை இழந்து கடன் ஏற்பட்டு சமூகத்தில் ஏற்படும் அவமானம் காரணமாக தான் மட்டுமில்லாமல் தன் குடும்பத்திற்கே விஷம் குடித்து உயிரிழப்பு செய்யக் கூடிய நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது எனவும், கடந்த ஆண்டு ஆன்லைன் சூதாட்டத்தின் மூலமாக 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அந்நிறுவனம் சம்பாதித்துள்ளது. அதில் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரியாக 3,000 கோடி கிடைத்துள்ளது எனத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு அந்நிறுவனத்தின் வருவாய் 15 ஆயிரம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கிறார்கள் எனக் குறிப்பிட்ட அவர், இன்னும் இரண்டு ஆண்டுக் காலத்தில் 40 ஆயிரம் கோடியாக உயரும் என்றும் சொல்லப்படுவதாகக் குறிப்பிட்டார். 40,000 கோடி யாருடைய பணம் எனக் கேள்வி எழுப்பிய அவர், சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களுடைய பணம் எனத் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி’

தொடர்ந்து பேசிய அவர், நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு இரண்டு வாரம் வரை காத்திருக்காமல் 2 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு உடனடியாக அறிக்கையைச் சமர்ப்பித்து அவசரச் சட்டம் கொண்டு வர வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பாட்டாளி மக்கள் கட்சி ஓட்டு அரசியலுக்காக இதை செய்யவில்லை மக்களின் நலனுக்காகத் தான் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த அவர், மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடிய வகையில் பாமகவின் அடுத்தடுத்த போராட்டங்கள் அமையும் எனத் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் நீண்ட காலமாக, மிகத் தீவிர பிரச்சினை ஆன்லைன் சூதாட்டம் இருப்பதாகவும், லட்சக் கணக்கான மக்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாகக் கவலை தெரிவித்தார். பல தரப்பட்ட கோடீஸ்வரர்கள் விளம்பரங்களைக் கொடுத்து சாதாரண மக்களை விளையாடத் தூண்டுவதாகக் குற்றச்சாட்டு தெரிவித்த அவர், இதற்கு முன்பு ஆன்லைன் சூதாட்ட தடை ரத்து செய்தது முதல் இன்று வரை 23 பேர் உயிரிழப்பு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதுவரை ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் பிறப்பிக்கக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி 20க்கும் மேற்பட்ட ட்விட்டர் பதிவுகளை செய்துள்ளதாகவும், அறிக்கைகளை வெளியிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மது, போதை பழக்கம், ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து மக்கள் மீண்டுவர வேண்டும் எனத் தெரிவித்த அவர், நேற்று பாமக தலைவராகப் பிரதமர் இல்லத்தில், அவரை சந்தித்து அவரது வாழ்த்துக்களைப் பெற்றதாகவும், அப்போது தமிழகத்தின் பிரச்சினைகளைப் பிரதமரிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.