இங்கிலாந்தில் குரங்கு அம்மை பாதிப்பு 1,076 ஆக உயர்வு

இங்கிலாந்தில் 1,076 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  குரங்கு அம்மை நோய் பரவல் முதல் முறையாக ஆப்பிரிக்கா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா,…

இங்கிலாந்தில் 1,076 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

குரங்கு அம்மை நோய் பரவல் முதல் முறையாக ஆப்பிரிக்கா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடு என இதுவரை 39 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது.

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் பரவுவது அசாதாரணமானது, கவலைக்குரியதாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதானம் டெட்டேராஸ் தெரிவித்திருந்தார். மேலும் இந்நோய் பரவலின் தன்மைகள் மற்றும் அதனை எதிர்கொள்வது உள்ளிட்ட வழிமுறைகளை ஆலோசிப்பதற்காக கடந்த 23ம் தேதி உலக சுகாதார அமைப்பு ஆலோசனை கூட்டம் நடத்தியது.

இந்நிலையில் இங்கிலாந்தில் குரங்கு அம்மை நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்த அறிக்கையை அந்நாட்டு அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஜூன் 26 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி, இங்கிலாந்தில் 1,076 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவன இயக்குனர் டாக்டர் சோபியா மக்கி கூறுகையில், இங்கிலாந்தில் குரங்கு நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. வரும் நாட்களில் இந்த பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மக்கள் அதிகளவில் வெளியில் செல்லாமலும், புதிய நபர்களை சந்திக்காமலும், வீட்டிலேயே இருந்தால் நோய் தொற்று பரவலை தடுக்க முடியும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.