சென்னை தலைமைச் செயலகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான 2 நாள் மாநாடு தொடங்கியது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
முதலமைச்சர் விஜய் இம்மாநாட்டில் 28 துறைகளின் செயல்திட்டங்கள் மற்றும் “வெற்றி தமிழகம்” தொலைநோக்கு ஆவணத்தின் அடிப்படையில் மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்துகிறார்.
மூன்று அமர்வுகளாக நடைபெறும் இம்மாநாட்டில் இன்று சட்டம் ஒழுங்கு, பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு, சிங்கப்பெண் அதிரடிப்படையின் செயல்பாடுகள், போக்சோ வழக்குகளின் நிலை உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.
ஜூன் 30 (நாளை) சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தொடர்பான திட்டங்கள் குறித்து IFS அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.




