திருப்பூரில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர், பின்னர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
திருப்பூர் சலவைபட்டறை, ஜே.ஜே. நகர் பகுதியில் ஓட்டுநர் குமார், தனது மனைவி தனலட்சுமியுடன் கடந்த 5 மாதங்களாக அப்பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி தனலட்சுமி, அவரது ஆண் நண்பர் காட்டுராஜா என்பவருடன் தவறான நட்பில் இருந்து வந்ததாகவும், அதனை கணவன் குமார் கண்டித்ததாகவும் தெரிகிறது.
ஆண் நண்பருடனான தவறான நட்பை தொடர்ந்து வந்ததால் ஆத்திரமுற்ற கணவன் குமார், அரிவாளால் மனைவியை வெட்டி படுகொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து வேலம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் சரண்அடைந்த கணவன் குமாரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








