செவித்திறன் சவால் உடைய ஒருவருக்கு ஹோட்டல் ஊழியர் சைகை மொழியில் வாழ்த்து தெரிவித்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்றைய நவீன உலகில் இணையத்தின் பயன்பாடு நம் வாழ்வில் அத்யாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. சமூகவலைதளங்களில் நாம் அதிக நேரத்தை செலவிடுகிறோம். சமூக வலைதளங்களில் உலா வரும் சில வீடியோக்கள் நம் இதயத்தை வருடுவது போன்று இருக்கும். அவ்வாறான ஒரு வீடியோ தான் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி பலரின் மனதையும் கவர்ந்துள்ளது.
அந்த வீடியோவில், செவித்திறன் சவால் உடைய பெண் ஒருவருக்கு ஹோட்டல் ஊழியர் சைகை மொழியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அவருடன் அங்குள்ள அனைவரும் சேர்ந்து சைகை மொழியில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் காட்சி நம்மை உணர்ச்சிவசப்பட செய்வதாக அமைந்துள்ளது.
இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களை நாம் செய்யும் போது நம்மை சுற்றி இருப்பவர்களை நாம் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.







