திகிலுட்ட வருகிறது ’தி வில்லேஜ்’ – வரும் 24-ம் தேதி ரிலீஸ்!

மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவான தி வில்லேஜி தொடரின் வெளியீட்டுத் தேதியை பிரைம் வீடியோ அறிவித்துள்ளது. ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் சார்பில்,  பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிபில் உருவான ‘தி வில்லேஜ்’ தொடர் நவம்பர் 24 ஆம்…

மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவான தி வில்லேஜி தொடரின் வெளியீட்டுத் தேதியை பிரைம் வீடியோ அறிவித்துள்ளது.

ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் சார்பில்,  பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிபில் உருவான ‘தி வில்லேஜ்’ தொடர் நவம்பர் 24 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி வில்லேஜ்’ தொடர்,  தொடக்கத்தில் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக்தாஸ் குப்தா ஆகியோரால் உருவாக்கப்பட்டது.  இத்தொடர் கிராஃபிக் திகில் நாவலால் ஈர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு திகில் தொடராகும்.

தனது குடும்பத்தை ஆபத்திலிருந்து மீட்டு காப்பாற்றுவதற்காக சாகச பயணத்தை மேற்கொள்ளும் ஒரு மனிதனை சுற்றி இந்த கதை சுழல்கிறது.  இந்தத் தொடரில், நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார்.  அவருடன் திவ்யா பிள்ளை,  அலீயா,  ஆடுகளம் நரேன்,  ஜார்ஜ் மரியான்,  ஜான் கொக்கன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:ஜப்பான் திரைப்படம்: முதல் 5 நாட்களுக்கு மட்டும் கூடுதல் காட்சிக்கு அரசு அனுமதி!

இந்தத் தொடர் இந்தியாவில் மட்டுமல்லாது,  உலகெங்கிலும் உள்ள 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாக உள்ளது.  அதேபோல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளிலும் வெளியாகிறது.  திகில் தொடரான ‘தி வில்லேஜ்’, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.