நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில், இயங்கி வந்த தேசிய மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு – இந்து சமய அறநிலையத் துறையினர் சீல் வைத்தனர்.
நாகப்பட்டினத்தில் நூறாண்டுகளை கடந்து, அரசு உதவி பெறும் பள்ளியாக தேசிய
மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி நாகப்பட்டினம் மற்றும்
நாகூர் ஆகிய இடங்களில் 5 கிளை பள்ளிகள் மூலம், மாணவர்களுக்கு கல்வி தந்து
சேவை அழித்து வருகின்றனர். இந்த நிலையில், நாகப்பட்டினத்தில் உள்ள பள்ளிக்கு,
பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள நீலாயதாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான
இடத்தை, குத்தகைக்கு எடுத்து விளையாட்டு மைதானம் செயல்படுத்தி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், கடந்த 2001ம் ஆண்டு முதல் ரூ.2 கோடியே 89 லட்சம் அறநிலையத்துறைக்கு
வாடகை செலுத்தாமல், பள்ளி நிர்வாகம் பாக்கி வைத்துள்ளதாக அறநிலையத்துறை
அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து உதவி ஆணையர் ராணி தலைமையில்,
அறநிலையத்துறை அதிகாரிகள் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள இடத்திற்கு
வந்தனர். வாடகை பாக்கி செலுத்தாத காரணத்தால், விளையாட்டு மைதானம்
உள்ளே யாரும் செல்ல முடியாத படி கதவுகளை பூட்டி சீல் வைப்பதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த, தேசிய மேல்நிலைப்பள்ளிகளின் தாளாளர் மற்றும்
செயலாளாரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, நிஜாமுதீன் தலைமையில்
ஆசிரியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் பள்ளி விளையாட்டு
மைதானத்திற்கு, அறநிலையத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைக்க எதிர்ப்பு
தெரிவித்தனர்.
சீல் வைக்க வந்த இணை ஆணையர் ராணியிடம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்
பள்ளி தாளாளருமான நிஜாமுதின் வாக்கு வாதம் செய்தனர். மேலும், அறநிலையத்துறை
நீதிமன்றத்தில் பள்ளி சார்பில் மேல்முறையீடு செய்துள்ளதால், வரும் 26 ம் தேதி வரை சீல்
வைக்க கூடாது என கூறி, சீல் வைக்கவிடாமல் பள்ளி தாளாளர் தரையில் படுத்து எதிர்ப்பு
தெரிவித்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை சமாதானம் செய்தனர்.
மேலும், தேசிய மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் உடன் இணைந்து அறநிலையத்துறையை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினார். ஆனால், அறநிலையத்துறை அதிகாரிகள் விளையாட்டு மைதானம் நுழைவு வாயில் கதவை பூட்டினர். பின்னர், தாங்கள் கொண்டு வந்த பூட்டை பூட்டி சீல் வைத்தனர். பின்னர் விளையாட்டு மைதானத்தில் சுற்றி சேதம் அடைந்த சுவர்களை இரும்பு கம்பிகளை போட்டு அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கு. பாலமுருகன்