தென்காசியில் பலத்த காற்றினால் தென்னை மரம் முறிந்து அருகிலிருந்த மின் கம்பம் மீது விழுந்ததில் மின் கம்பம் சாய்ந்ததில் ஏற்பட்ட தீ அப்பகுதியிலிருந்த வைக்கோல் கட்டுகள் மீது பரவியது.
தமிழகத்தில் தற்போதுதான் அக்னிநட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது.தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான காலநிலை நிலவுகிறது.அதிகாலை முதலே பலத்த காற்று தென்காசி நகர்ப்பகுதியில் வீசி வருகிறது.இந்நிலையில் தென்காசி வழிமறிச்சான் பகுதியில் வீசிய பலத்த காற்றின் வேகம் தாங்காமல் தென்னை மரம் முறிந்து அருகிலிருந்த மின் கம்பத்தின் மீது விழுந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் பாரம் தாங்காத மின் கம்பம் சாய்ந்து விழுந்தது.இதனால் மின் வயர்களில் இருந்து தீ மளமளவென பரவ தொடங்கியது.இந்த தீப்பொறிகளானது புதியதாக அமைக்கப்பட்ட சாலைகளின் மீது போடப்பட்டிருந்த தென்ன நார் கூந்தல் மீது விழுந்து தியானது அருகிலிருந்த வைக்கோல் கட்டுகளின் மீது பட்டு தீ பரவ தொடங்கியது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.மேலும் மின் இணைப்பும் உடனடியாக துண்டிக்கப்பட்டதால் சேதம் தவிர்க்கப்பட்டது.இதுகுறித்து இன்மேல் பலத்த காற்று வீசும் காலம் என்பதால் பலவீனமான மின் கம்பங்களை
மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-வேந்தன்