ஆப்கனுக்கு எதிரான ஒரு நாள் தொடர் – காயம் காரணமாக விலகும் ஹர்திக் பாண்டியா…?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிந்து காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலக உள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இரு அணிகளுக்கான டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து முதல் ஒரு நாள் போட்டி ஜூன் 13 ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறுகிறது. இரண்டாவது ஒரு நாள் போட்டி ஜூன் 17 ஆம் தேதி லக்னோவிலும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஜூன் 20 ஆம் தேதி சென்னையிலும் நடக்கின்றன.

இந்த நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஆப்கானுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ வட்டாரங்களின் தகவலின் படி, தொடைத்தசை சுளுக்கு ஏற்பட்டுள்ளதால் ஹார்திக் பாண்டியாவிற்கு தசைகளில் வலி உண்டாகியுள்ளது. இது நீண்ட கால பாதிப்பு அல்ல, ஆனாலும் அவர் அடுத்த சில நாட்களுக்கு எந்தவிதமான உடல் எடையைத் தாங்குவதையும் தவிர்க்குமாறு மருத்துவ ஊழியர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் குணமடையும் வரை அவர் பெங்களூருவிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளதாக கூறப்பட்டுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.