”விடாமுயற்சி” படத்தில் இருந்து விலகிய கதாநாயகி…

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் இருந்து பிரபல நடிகை விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில்…

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் இருந்து பிரபல நடிகை விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையே, ஐரோப்பாவில் பைக் டூர் சென்ற அஜித்குமார் சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இதுகுறித்த வீடியோக்களும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களும் வைரலாகின.

சமீபத்தில் நடைபெற்ற சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுபாஸ்கரனிடமே பத்திரிகையாளர்கள் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் நிலவரம் குறித்து கேட்டதில், விரைவில் விடாமுயற்சி ஆரம்பமாகும் என அறிவித்து அஜித் ரசிகர்களை ஹேப்பியாக்கினார்.

இப்படியான சூழ்நிலையில்,  சந்திரமுகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லைக்கா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கலந்துகொண்டு, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படுவதாகவும் தங்களுக்கு இப்படம் முக்கியமானது என்றும் கூறியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் அபுதாபியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு முக்கிய வில்லனாக சஞ்சய் தத்தும் மற்றொரு வில்லனாக நடிகர் ஆரவ்வும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்த ஆரவ் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைதொடர்ந்து  படப்பிடிப்பு, அபுதாபியில் கடந்த அக். 4ம் தேதி தொடங்கியது.

அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றுள்ளதாக தகவல் வெளியானது. தொடர்ச்சியாக 3 மாதங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு அங்கு நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த படத்தின் வில்லன் ரோலில் மாற்றம் ஏற்பட்டது போல் தற்போது இப்படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி இருந்த பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

அவர் விலகியதால் அவருக்கு பதில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ரெஜினா கசெண்ட்ரா கமிட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இருந்து விலகிய ஹூமா குரேஷி இதற்கு முன் அஜித்துடன் வலிமை படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.