”நாயகன்” மீண்டும் வரார்..!

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘நாயகன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகரும் ராஜ்யசபா உறுப்பினருமான கமல்ஹாசன் வரும் நவம்பர் 7 ஆம் நாள் அன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த 1987ல் வெளியாகி பெரும் வெற்றியடைந்த நாயகன் திரைப்படம் நவம்பர் 6ல் மறுவெளியீடாகிறது. முக்தா பி லிம்ஸ் தயாரித்து மணிரத்னம் இயக்கிய நாயகன் படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. மேலும் 1988 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.

வரதராஜ முதலியார் என்பவரின் வாழ்க்கையைத் தழுவி *நாயகன்*கதை எழுதப்பட்டிருந்தது. இளைஞனான வேலுவும் வயதான வேலு நாயக்கரும் திரையில் உயிர் பெற்றிருந்தார்கள். மகனாக ‘நிழல்கள்’ ரவி, மகளாக கார்த்திகா, மருமகனாக,போலீஸ் அதிகாரியாக நாசர் மற்றும் வீ. கே. ராமசாமி, டெல்லி கணேஷ், ஜனகராஜ், குயிலி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

” நாளைக்கு கணக்கு பரிட்சை சீக்கிரமா விட்டுடுவீங்களா ” என்று கேட்கும் இடம் வலி மிகுந்த வசனம்..நடிகை சரண்யாவுக்கு இது முதல் படம். நீங்க நல்லவரா கெட்டவரா என்னும் கேள்விக்கு, முதிர்ந்த வேலு நாயக்கரால் “தெரியலயேப்பா”என்று என்று ஒற்றை பதிலை கூறிய மணிரத்தினத்தின் நாயகன் திரைப்படம் மறுபடியும் உங்கள் பார்வைக்கு.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.