முக்கியச் செய்திகள் தமிழகம்

‘சென்னையில் ஒரு நாள்’ பட பாணியில் கொண்டுவரப்பட்ட இதயம்!

’சென்னையில் ஒரு நாள்’ பட பாணியில் மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்ட  இதயம்.

தேனியைச் சேர்ந்த சக்தி (வயது 18) என்பவர் விபத்தில் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவரின் நிலைமை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.  தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் மீட்க முடியாத அபாய கட்டத்திற்கு சென்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் சக்தியின் பெற்றோருடன் பேசி அவர்களின் சம்மதத்துடன் அவருடைய இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இறந்தவரின் உடல் உறுப்புகளை ஆம்புலன்ஸ் மூலம்  ‘சென்னையில் ஒரு நாள்’ பட பாணியில் அதிவிரைவாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு போக்குவரத்து காவல்துறையினரின் உதவியோடு இதயம், நுரையீரல் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மதியம் 12:30 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

தனது மகன் சக்தி உயிரிழந்தாலும் இருவருக்கு வாழ்வு கொடுத்துள்ளார் என அவரின் பெற்றோர்கள் உருக்கத்தோடு தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு?

Web Editor

தமிழுக்கு என்றால் எந்நேரத்திலும் வர தயார்: முதலமைச்சர்

EZHILARASAN D

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1,10,000 கன அடியாக அதிகரிப்பு

Arivazhagan Chinnasamy